ஹமாஸிடம் இருந்து 3 பணயக் கைதிகள் விடுதலை: குடும்பத்தினரின் கதி கேள்விக்குறி!
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி மூன்று இஸ்ரேலிய பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்துள்ளது.
பிணைக் கைதிகள் விடுவிப்பு
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் பிடியில் இருந்த 3 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டு இஸ்ரேலிய எல்லைக்குள் பாதுகாப்பாக திரும்பியுள்ளனர்.
ஓஃபர் கால்டரோன்(Ofer Kalderon), கீத் சாமுவேல் சீகல்(Keith Samuel Siegel) மற்றும் யார்டென் பிபாஸ்(Yarden Bibas) ஆகியோர் செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
Hamas Releases Three Israeli Hostages – IDF
— NEXTA (@nexta_tv) February 1, 2025
Ofer Calderon, Yarden Bibas and U.S. citizen Keith Siegel have been handed over to Red Cross representatives. They are now being transported to Israeli territory under military escort.
Before handing the hostages over to the Red… pic.twitter.com/AOaPrJIdMX
தற்போது அவர்கள் இராணுவப் பாதுகாப்பின் கீழ் கொண்டு செல்லப்படுகிறார்கள். விடுவிப்பதற்கு முன்பு, ஹமாஸ் பணயக் கைதிகளை கேமராவில் தோன்றச் செய்து, "விடுதலைச் சான்றிதழ்களை"க் காட்டும்படி செய்துள்ளனர்.
கேள்விக்குறியாக இருக்கும் குடும்பத்தினர்
இந்த விடுதலை ஒரு நம்பிக்கை எதிர்காலத்தை கொண்டு வந்தாலும், தொடரும் சோகமான சூழ்நிலையை எடுத்துக் காட்டுகிறது.
யார்டென் பிபாஸ் அக்டோபர் 7, 2023 அன்று நடந்த தாக்குதலின் போது அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கடத்தப்பட்டார்.
யார்டென் பிபாஸ் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், மனைவி மற்றும் குழந்தைகளின் இருப்பிடம் மற்றும் நிலைமை இன்னும் தெரியவில்லை.
பாலஸ்தீனிய வட்டாரங்கள் கடந்த ஆண்டு அவர்கள் இறந்துவிட்டதாக கூறினாலும், இஸ்ரேலிய இராணுவ உளவுத்துறை இந்த கூற்றுகளை உறுதிப்படுத்த முடியவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |