கனடாவில் லொறி சாரதிகள் இடையே துப்பாக்கிச் சூடு: 3 இந்திய வம்சாவளியினர் கைது: வீடியோ
கனடாவில் இழுவை டிரக் சாரதிகளுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக 3 இந்திய வம்சாவளி சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டிரக் சாரதிகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு
கனடாவின் பிராம்ப்டன் நகரில் கடந்த அக்டோபர் மாதம் 7ம் திகதி இரவு சுமார் 10.45 மணி அளவில் இழுவை டிரக் சாரதிகள் குழுக்களுக்கு இடையே துப்பாக்கி சூடு சம்பவம் அரங்கேறியது.
Tow Truck Rivalry Leading to Shooting: 3 Arrests, 1 Suspect Still Wanted 🚨
— Peel Regional Police (@PeelPolice) December 11, 2025
On October 7, an altercation between rival tow truck groups escalated into gunfire, leaving one person with minor injuries. After weeks of investigation, @PeelPolice have arrested three individuals, but… pic.twitter.com/xm9NQYKXM1
மெக்வீன் டிரைவ் மற்றும் காசில்மோர் சாலை அருகே உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நடந்த இந்த சண்டையில் ஒருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.
நீண்ட நாள் விசாரணைக்கு பிறகு, குற்றப் புலனாய்வாளர்கள் துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை வெற்றிகரமாக கண்டுபிடித்தனர்.
3 இந்திய வம்சாவளியினர் கைது
இந்த சம்பவம் தொடர்பாக பீல் பிராந்திய காவல்துறையினர் 3 பேரை கைது செய்துள்ளனர், அவர்கள் மூவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த லொறி சாரதிகள் என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் மன்ஜோத் பட்டி, நவ்ஜோத் பட்டி மற்றும் அமன்ஜோத் பட்டி என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும் நான்காவது சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் திவீரமாக இறங்கியுள்ளனர்.
அதே சமயம் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |