இந்திய மாலுமிகள் பயணித்த 3 வர்த்தக கப்பல் மீது தாக்குதல்: மத்திய கிழக்கில் பதற்றம்
3 Indian Sailors Carrying Ship Attacked in Middle East: மத்திய கிழக்கில் இந்திய மாலுமிகள் பயணித்த கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்திய மாலுமிகள் கப்பல் மீது தாக்குதல்
மத்திய கிழக்கில் ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இப்பகுதியில் கடந்த செப்டம்பர் 8ம் மற்றும் 9ம் திகதிகளில் இந்திய மாலுமிகள் பயணித்த 3 வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதலில் 3 வர்த்தக கப்பல்களில் இருந்த அனைத்து இந்திய மாலுமிகளும் காயமின்றி உயிர் பிழைத்தனர்.
கடல்சார் நிர்வாக இயக்குநரகம் வெளியிட்ட தகவலில், செப்டம்பர் 8ம் திகதி ஓமன் வளைகுடா பகுதியில் இரவு 11 மணியளவில் ஜிம்பாப்வே கொடியுடன் பயணித்த ரீஸ்கோ என்ற கச்சா எண்ணெய் கப்பலை அமெரிக்க கடற்படை தாக்கியுள்ளது.

இந்த கப்பலில் கிட்டத்தட்ட 21 இந்திய மாலுமிகள் இருந்த நிலையில், அவர்கள் அனைவரும் தாக்குதலுக்கு முன்பாகவே கப்பலில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதைப்போல ஓமன் மற்றும் பாரசீக வளைகுடா பகுதியில் செப்டம்பர் 8 மற்றும் 9ம் திகதியில் தாக்குதலுக்கு உள்ளான மற்ற 2 படகுகளில் இருந்த இந்திய மாலுமிகளும் பத்திரமாக காயமின்றி மீட்கப்பட்டுள்ளனர்.
இருதரப்பிற்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள பாரசீக மற்றும் அதனை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் இந்திய கொடியுடன் பயணிக்கும் கப்பல்கள் மற்றும் இந்தியா நோக்கி பயணிக்கும் கப்பல்கள் என மொத்தம் 10 கப்பல்கள் அடையாளம் காணப்பட்டு அதிலுள்ள மாலுமிகள் பத்திரமாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஈரான் அமெரிக்கா இடையிலான போர் தொடங்கியதில் இருந்து இதுவரை இந்தியக் கொடி பொருத்தப்பட்ட 4 கப்பல்கள் மற்றும் இந்தியர்கள் பயணித்த 50 கப்பல்கள் இத்தகைய தாக்குதலை எதிர்கொண்டுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |