அமெரிக்காவில் கார் விபத்தில் சிக்கிய 5 இந்திய வம்சாவளி மாணவர்கள்: 3 பேருக்கு நேர்ந்த சோகம்!
அமெரிக்காவின் ஜார்ஜியாவில் கார் விபத்தில் இந்திய வம்சாவளி மாணவர்கள் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐந்து மாணவர்கள் சிக்கிய விபத்து
அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தின் ஆல்ஃபாரெட்டா பகுதியில் கடந்த வாரம் நிகழ்ந்த கார் விபத்தில் ஐந்து இந்திய வம்சாவளி மாணவர்கள் சிக்கினர்.
இதில் துயரக்குரிய வகையில் மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.படுகாயமடைந்த மற்ற இரு மாணவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மே 14ஆம் திகதி வெஸ்ட்சைடு பார்க்வேயில் இந்த விபத்து நிகழ்ந்தது. வேக கட்டுப்பாடு மீறியதே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
கார் ஓட்டியவர் கட்டுப்பாட்டை இழந்ததால் வேகமாக சென்று மரங்களுக்கு இடையே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
3 மாணவர்கள் உயிரிழப்பு
ஆர்யன் ஜோஷி(Aryan Joshi ) மற்றும் ஸ்ரீயா அவசராலா(Sriya Avasarala) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு பயணியான அன்வி சர்மா(Anvi Sharma) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
ரித்விக் சோமேபல்லி(Rithwak Somepalli) மற்றும் முகமது லியாகத்( Mohammed Liyakath) ஆகிய காயமடைந்த மாணவர்கள் ஆல்ஃபாரெட்டாவில் உள்ள வடக்கு ஃபுல்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆல்ஃபாரெட்டா உயர்நிலைப் பள்ளியில்(Alpharetta High School) படித்து வந்த ஆர்யன் ஜோஷி அடுத்த வாரம் பள்ளியை விட்டு வெளியேற இருந்தார். "அவர் எங்களின் மிகப்பெரிய ஆதரவாளர்களில் ஒருவர், எங்கள் அனைத்து வெற்றிகளுக்கும் அவரது ஆதரவு மிக முக்கியமான காரணம்" என்று ஆல்ஃபாரெட்டா உயர்நிலைப் பள்ளி கிரிக்கெட் அணி இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |