BBC-யின் தலைசிறந்த 100 பெண் ஆளுமைகள் : பட்டியலில் இடம் பிடித்த மூன்று இந்திய பெண்கள்!
உலகளாவிய அளவில் பெண்களின் சாதனைகளை கொண்டாடும் பிபிசி 100 பெண்கள் பட்டியலில் இந்த ஆண்டு மூன்று இந்திய பெண்கள் இடம்பிடித்து நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நாடியா முராத் உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள பல தலைசிறந்த பெண்களுடன் இணைந்து, இந்தியாவின் வினேஷ் போகட், பூஜா ஷர்மா மற்றும் அருணா ராய் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
வினேஷ் போகட்
ஒலிம்பிக்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்திய வினேஷ் போகட், பாரீஸ் ஒலிம்பிக்கில் ஏற்பட்ட சர்ச்சைக்கு மத்தியில் உலகின் 100 சிறந்த பெண்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மல்யுத்தத்தில் இந்தியாவின் பெயரை உலகளவில் பரப்பிய வினேஷ், பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக குரல் கொடுத்து பெண்களுக்கு ஒரு முன் மாதிரியாக திகழ்கிறார்.
ஒலிம்பிக்கில் பதக்கத்தை இழந்தாலும், மக்கள் மனதில் என்றென்றும் ஒரு சாம்பியனாகவே இருப்பார்.
பூஜா ஷர்மா
டெல்லியைச் சேர்ந்த பூஜா ஷர்மா, ஆதரவற்றோரின் சடலங்களுக்கு இறுதிச் சடங்குகளை செய்து வருகிறார்.
இது போன்ற ஒரு காரியத்தை செய்வதற்கு தயங்கும் சமுதாயத்தில், பூஜா ஷர்மா தனது தன்னார்வப் பணியின் மூலம் மனிதநேயத்தின் உன்னதத்தை வெளிப்படுத்துகிறார்.
இவரது இந்த செயல், சமூகத்தில் உள்ள பலருக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்துள்ளது.
அருணா ராய்
தமிழகத்தைச் சேர்ந்த அருணா ராய், கடந்த 40 ஆண்டுகளாக கிராமப்புற மக்களின் நலனுக்காக பாடுபட்டு வருகிறார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை கொண்டு வர முக்கிய பங்கு வகித்த அவர், அரசாங்கத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை வலியுறுத்தி வருகிறார்.
இந்த மூன்று பெண்களும் தங்கள் தனித்துவமான பங்களிப்புகள் மூலம் இந்தியாவின் பெருமையை உலகளவில் பரப்பியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |