உக்ரைன் ட்ரோன் தாக்குதலில் இந்தியர் பலி: மூவர் காயம்
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு அருகில் உக்ரைன் நிகழ்த்திய ட்ரோன் தாக்குதலில் இந்தியப் பணியாளர் ஒருவர் பலியாகியுள்ளதாகவும், மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்தி
மாஸ்கோவிலுள்ள இந்திய தூதரகம் சமூக ஊடகமான எக்ஸில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், மாஸ்கோ பகுதியில் நிகழ்ந்த ட்ரோன் தாக்குதல் ஒன்றில் இந்தியப் பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
One Indian worker has lost his life and three others have been injured in a drone attack in Moscow region earlier today. Embassy officials have visited the location and met the injured workers in the hospital.
— India in Russia (@IndEmbMoscow) May 17, 2026
The Embassy condoles the loss of life and is working with the…
காயமடைந்தவர்கள் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய தூதரக அதிகாரிகள் காயமடைந்தவர்களை சென்று சந்தித்ததாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய ஆவன செய்துவருவதாகவும் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மாஸ்கோ உட்பட ரஷ்யாவின் பல்வேறு பகுதிகள் மீது இரவு நேரத்தில் சுமார் 600 உக்ரைன் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

இந்த தாக்குதல்களில் நான்கு பேர் வரை கொல்லப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |