ஈரான் தாக்குதலில் அமீரகத்தில் மூன்று இந்தியர்கள் காயம்
ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் மூன்று இந்தியர்கள் காயமடைந்துள்ளதாக அமீரகத்திலுள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
மூன்று இந்தியர்கள் காயம்
ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள Fujairah என்னுமிடத்தில் பாரிய எரிபொருள் சேமிப்பகம் ஒன்று அமைந்துள்ளது.

அந்த சேமிப்பகம் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நிகழ்த்தியதில், சேமிப்பகத்தில் தீப்பற்றியுள்ளது.
இந்த சம்பவத்தில் இந்தியர்கள் மூவர் காயமடைந்துள்ளதாக அபுதாபியிலுள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
Three Indian nationals have been injured in today’s attacks in Fujairah. We are in touch with local authorities for ensuring adequate medical care and welfare of the affected Indian nationals.@MEAIndia @cgidubai
— India in UAE (@IndembAbuDhabi) May 4, 2026
அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை மற்றும் உதவிகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக உள்ளுர் அதிகாரிகளுடன் தொடர்பிலிருப்பதாகவும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |