கட்டுக்கடங்காமல் முடி வளர்ச்சியை அதிகரிக்க இந்த 3 பொருட்கள் போதும்- மருத்துவரின் கூற்று
முடி உதிர்வு என்பது ஆண், பெண் என இருபாலருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனையாகும்.
பலரும் முடி வளரவில்லை என்றாலும் கூட பரவாயில்லை ஆனால் முடி உதிர்வு மட்டும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
மேலும் மன அழுத்தம், மரபணு பரிமாற்றம் மற்றும் ஒழுங்கற்ற தலை முடி பராமரிப்பு இதுபோன்ற காரணங்கள் தான் தலை முடி உதிர்வு பிரச்சினைக்கு வழிவகுக்கிறது.
அந்தவகையில், முடி வளர்ச்சியை அதிகரிக்க மருத்துவர் தலத் சலீம் ஒரு ஹேர்பேக் குறித்த தகவலை பகிர்ந்துள்ளார்.
தேவையான பொருட்கள்
- ஆளி விதை- 1 ஸ்பூன்
- சின்ன வெங்காயம்- 5
- தேங்காய் எண்ணெய்- 1 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் ஆளி விதை சேர்த்து 1 டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு விதை இல்லாமல் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து சாறை எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு பவுலில் தயார் செய்து வைத்துள்ள ஆளி விதை ஜெல், சின்ன வெங்காய சாறு, தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும்.
இந்த பேக்கை தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊறவைத்து பின் மென்மையான ஷாம்பு கொண்ட அலசிக்கலாம்.
இந்த ஹேர்பேக்கை வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் தலைமுடி பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி முடி நன்கு வளர்ச்சியடையும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |