அவுஸ்திரேலியாவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு பயங்கரம்! மூவர் மரணம்..வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம்
அவுஸ்திரேலியாவில் நடந்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திடீர் துப்பாக்கிச்சூடு
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள Cargelligoயில் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
@nswpolice/X
இதனையடுத்து அவசரகால சேவைகள் வரவழைக்கப்பட, உயிரிழந்த மூன்று பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. அத்துடன் படுகாயமடைந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதுகுறித்து பேசிய காவல்துறையினர், சந்தேக நபர்கள் தலைமறைவாக இருப்பதாகவும், சம்பவம் நடந்த இடத்தை பொதுமக்கள் தவிர்க்குமாறு கூறியதாகவும் தெரிவித்தனர். மேலும் உள்ளூர்வாசிகள் வீட்டிற்குள்ளேயே தங்கியிருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பரில் Bondi கடற்கரை துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இச்சம்பவம் அதிர்வலையை உண்டாக்கியுள்ளது.
AP
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |