அமெரிக்காவில் புத்தாண்டு பிறப்பதற்கு ஒரு சில நிமிடம் முன்பு நடந்த துப்பாக்கிச்சூடு! 3 பேர் பலி
அமெரிக்காவில் புத்தாண்டு நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் Mississippi மாகாணத்தில் உள்ள Guilford நகரில் பிறக்கும் புதிய ஆண்டை கொண்டாடும் விதமாக விருந்து நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தது. இதில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் புத்தாண்டு பிறக்கும் ஒரு சில நேரத்திற்கு முன்பு மர்ம நபர்கள் மக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அப்பாவி பொதுமக்கள் 3 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலயே உயிரிழந்தனர்.
சிலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நால்வரில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக புத்தாண்டு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களும், படுகாயமடைந்தவர்களும் எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக பொலிஸ் அதிகாரிகள் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.