கனடா அமெரிக்க எல்லையில் 3 மில்லியன் டொலர் போதைப்பொருள் சிக்கியது: ட்ரம்பின் குற்றச்சாட்டு உண்மைதானா?
கனடாவுக்குள்ளிருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் நுழைவதாலேயே தான் கனடா மீது தான் வரிகள் விதிப்பதாக கூறியிருந்தார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்.
அவரது கூற்றில் உண்மை உள்ளதோ என எண்ணும் வகையிலான சம்பவங்கள் சில சமீபத்தில் நிகழ்ந்துள்ளன.
கனடா அமெரிக்க எல்லையில் சிக்கிய போதைப்பொருள்
கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள வின்ட்சர் நகரையும், அமெரிக்காவிலுள்ள டெட்ராய்ட் நகரையும் இணைக்கும் டெட்ராய்ட் –வின்ட்சர் சுரங்கப்பாதை அல்லது டெட்ராய்ட்–கனடா சுரங்கப்பாதையில் அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளார்கள்.
ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி, வாகன சோதனையில் அவர்கள் ஈடுபட்டிருந்தபோது ட்ரக் ஒன்றின் பின் பக்கத்தில் சுமார் 90 கிலோ எடையுள்ள வெள்ளை நிற பவுடர் அடங்கிய பைகள் கிடைத்துள்ளன.
ஆய்வக சோதனையில், அது கொக்கைன் என்னும் போதைப்பொருள் என தெரியவந்துள்ளது. அதன் மதிப்பு சுமார் 3 மில்லியன் டொலர்கள் ஆகும். அந்த வாகனத்தை ஓட்டிய கனேடியரை அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள்.
அவர் மீது போதைப்பொருள் விநியோகம் தொடர்பில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த போதைப்பொருளுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றும், அது குறித்து தனக்குத் தெரியாது என்றும் அந்த கனேடியர் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதத்தில் மட்டுமே இந்த பாதையில் போதைப்பொருள் சிக்குவது இது மூன்றாவது முறையாகும்.
ஆக, கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக ட்ரம்ப் கூறியுள்ளது உண்மைதானோ என்னும் சந்தேகம் உருவாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |