இலங்கையில் 3 புதிய மறுசுழற்சி மின் நிலையங்கள்: மானிய உதவி வழங்கும் இந்தியா
இலங்கையில் புதிதாக அமைக்கப்பட உள்ள 3 மின் உற்பத்தி நிலையங்களுக்கான ஒப்பந்தம் இந்திய நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 புதிய மின் உற்பத்தி நிலையங்கள்
இலங்கையின் வடக்கு பகுதியில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள டெல்ப்ட் தீவு, நயினாதீவு, மற்றும் அனலத்தீவு ஆகிய பகுதிகளில் 3 புதிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு தினங்களுக்கு முன்பு இலங்கை அமைச்சரவை கூட்டத்தின் போது இது குறித்து முடிவு எடுக்கப்பட்டதாக ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவை செய்தி தொடர்பாளருமான பந்துல குணவர்தனே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அமைக்கப்பட உள்ள இந்த 3 மறுசுழற்சி மின் உற்பத்தி நிலையங்களிலும் இந்தியாவின் மானிய உதவியுடன் அமைக்கப்பட உள்ளன.
மேலும் இந்த 3 மறுசுழற்சி மின் உற்பத்தி நிலையங்களுக்கான கட்டமைப்பு ஒப்பந்தம் இந்தியாவை சேர்ந்த தனியார் துறை நிறுவனம் ஒன்றிடம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |