மூன்று பேரை சுட்டுக் கொன்ற ராணுவம்: பதற்றத்திற்கு மத்தியில் இஸ்ரேல், பாலஸ்தீனியம்
வெஸ்ட் பேங்க் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய ஆயுத சோதனையின் போது ஏற்பட்ட மோதலில் 3 பாலஸ்தீனயர்கள் வரை கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட வெஸ்ட் பேங்க் பகுதியில் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற தொடர் தாக்குதலில் 19 இஸ்ரேலியர்கள் வரை கொல்லப்பட்டத்தை தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவம் வெஸ்ட் பேங்கில் உள்ள ஜெனின் பகுதியில் தொடர்ச்சியாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு கடந்த மாதம் நடத்தப்பட்ட சோதனையின் போது, இஸ்ரேல் ராணுவத்திற்கும், பாலஸ்தீனிய கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பிரபல செய்தி நிறுவனத்தின் (aljazeera) செய்தியாளர் ஷிரீன் அபு அக்லே ( Shireen Abu Akleh) இஸ்ரேல் ராணுவ படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Extrajudicial executions. Israel assassinates three Palestinian young men in Jenin, no questions asked. The horror. pic.twitter.com/0HVTzsDSdR
— Hanan Ashrawi (@DrHananAshrawi) June 17, 2022
இந்தநிலையில், வெள்ளிக்கிழமையான நேற்று பயங்கர ஆயுதங்களை கைப்பற்றும் நோக்கில் வெஸ்ட் பேங்கின் ஜெனின் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய சோதனையின் போது 3 பாலஸ்தீனியர்கள் வரை கொல்லப்பட்டதாகவும், 8 பேர் வரை படுகாயம் அடைந்ததாகவும் பாலஸ்தீனிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் தங்களது ராணுவம் தாக்குதலுக்கு உள்ளாக்க பட்டதாகவும், தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் தெரிவித்துள்ளது.
இதுத் தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ள அறிக்கையில், வெஸ்ட் பேங்கின் இரண்டு பகுதிகளில் ராணுவம் சோதனையில் ஈடுபட்டது, அதன் முதல் பகுதியில் பாலஸ்தீனியர்கள் துப்பாக்கி சூடு மற்றும் பயங்கர வெடிப்பொருள்களை பயன்படுத்தியதால் இஸ்ரேல் ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியதாகவும், இரண்டாவது பகுதியில் இஸ்ரேல் ராணுவம் சோதனைக்கு செல்லும் போது, பாலஸ்தீனிய துப்பாக்கிதாரிகள் வாகனங்களில் வந்து தாக்குதல் நடத்தியால் இஸ்ரேல் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தியது என தெரிவித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: உணவு தானிய தட்டுப்பாடு மற்றும் பணவீக்கத்திற்கு..மேற்கத்திய நாடுகளின் தவறுகளே காரணம்: ரஷ்யா குற்றச்சாட்டு
அத்துடன் இந்த சோதனையின் முடிவில், வாகனத்திற்குள் இருந்து துப்பாக்கிகள், சப்மஷைன் துப்பாக்கி மற்றும் பிற உபகரணங்களை படையினர் பறிமுதல் செய்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.