சென்னையில் கொரோனா தொற்றால் 3 பேர் பாதிப்பு
சென்னையில் கொரோனா தொற்றால் 3 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
3 பேருக்கு பாதிப்பு
உலகத்தை உலுக்கிய கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் இல்லாமல் இருந்தது. இருந்தாலும் கொரோனா வைரஸ் தீவிரத்தை பொது சுகாதாரத்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
அதேபோல, சளி, காய்ச்சல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்ற பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் நேற்று 32 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 1 பெண் உள்பட 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர்கள் தற்போது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், அவர்கள் 3 பேரும் நலமுடன் உள்ளனர் என்றும் கொரோனா தொற்று பரவும் வகையிலான பாதிப்பு இல்லை என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |