லண்டனிலுள்ள இந்திய உணவகத்துக்கு தீவைப்பு: உயிருக்குப் போராடும் மூவர்
லண்டனிலுள்ள இந்திய உணவகம் ஒன்றிற்கு தீவைக்கப்பட்ட நிலையில், உணவகத்திலிருந்த ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
அவர்களில் மூன்று பேர் உயிருக்குப் போராடுவதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.
இந்திய உணவகத்துக்கு தீவைப்பு
கிழக்கு லண்டனிலுள்ள Ilford என்னுமிடத்திலுள்ள Gants Hill என்னுமிடத்தில் அமைந்துள்ளது Indian Aroma என்னும் இந்திய உணவகம்.
நேற்று இரவு 9.00 மணியளவில் அந்த உணவகத்தில் பெரும் தீவிபத்தொன்று ஏற்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்த நிலையில், இரவு 10.32 மணி வாக்கில் தீ அணைக்கப்பட்டுள்ளது.
அந்த தீவிபத்தில், மூன்று ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் என ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் மூன்று பேர் உயிருக்குப் போராடுவதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.
உணவகத்துக்கு தீவைக்கப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கிறார்கள். என்றாலும், இதுவரை இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.
பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில், இந்த சம்பவம் குறித்த விவரங்கள் எதுவும் தெரியுமானால் தங்களை அணுகுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |