மகா சிவராத்திரி கொண்டாட காட்டுக்குள் சென்ற 3 பேர் யானை தாக்கி மரணம்
மகா சிவராத்திரி கொண்டாட வனப் பகுதியில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்ற பக்தர்களை யானைகள் தாக்கியதில் 3 பேர் உயிரிழந்தனர்.
3 பேர் உயிரிழப்பு
மகா சிவராத்திரி இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலம், அன்னமைய்யா மாவட்டம், வை.கோட்டா கிராமத்தை சேர்ந்த சுமார் 15 பக்தர்கள் மகா சிவராத்திரி கொண்டாட வனப் பகுதிக்கு சென்றனர்.
அவர்கள் குண்டாலகோனா வனப்பகுதியில் உள்ள சிவன் கோயிலுக்கு நேற்று காலை நடந்து சென்றுள்ளனர். அப்போது, அவர்களில் வந்த ஒருவர் கையில் இருந்த பாத்திரத்தை தட்டியபடியே வந்துள்ளார்.
இந்த சத்தத்தை கேட்ட காட்டு யானைகள் கூட்டம் இவர்களை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த பக்தர்கள் தப்பிக்க முயன்றனர்.
ஆனாலும், யானைகள் தாக்கியதில் தினேஷ், மணியம்மா, செங்கலராயுடு ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். இதில், படுகாயம் அடைந்த இருவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |