இனி ரயில் டிக்கெட்டில் 3 சதவீத தள்ளுபடி - எப்படி பெறுவது?
இந்தியாவில், தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்கள் மூலம் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
ரயில் பயணிகளுக்கு டிஜிட்டல் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், ரயில்வே துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ரயில் டிக்கெட்டில் 3 சதவீத தள்ளுபடி
சமீபத்தில், எக்ஸ்பிரஸ் ரயில், புறநகர் மின்சர ரயில்களில் டிக்கெட் எடுக்க, புகார் அளிக்க என அனைத்து சேவைகளுக்குமான RailOne செயலியை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டது.

இந்த செயலியில் முன்பதிவில்லாத ரயில்களுக்கு டிக்கெட் பெறும் போது, ரயில்வே வேலட் மூலமாக பணம் செலுத்தினால் 3 சதவீத தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது இந்த செயலியில் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், ரயில்வே வேலட் மட்டுமல்லாது, UPI, டெபிட்/கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் என அனைத்து வகையான டிஜிட்டல் பரிவர்த்தனைக்கும் 3% தள்ளுபடி வழங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த சலுகை, மற்ற தளங்களில் முன்பதிவு செய்தால் கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சலுகை, வரும் 2026 ஜனவரி 14 முதல் 2026 ஜூலை 14 வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு தேவையான மென்பொருள் மாற்றங்களை செய்ய, ரயில்வே தகவல் அமைப்பு மையத்திற்கு (CRIS) ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |