சந்தேக நபரை கொடூரமாக தாக்கிய பொலிஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்! வைரலாகிவரும் வீடியோ
சந்தேக நபரை கொடூரமாக தாக்கியதற்காக மூன்று காவல்துறை அதிகாரிகள் அமெரிக்காவில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
தரையில் தள்ளி முகத்தில் பலமுறை குத்தும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.
மினியாபோலிஸ் மாகாணத்தில் சட்ட அமலாக்க அதிகாரிகளால் கொடூரமாக கொல்லப்பட்ட ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் ஃபிலாய்ட் இறந்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. இப்போது, இதேபோன்ற சம்பவம் ஆர்கன்சாஸில் இருந்து பதிவாகியுள்ளது.
அங்கு மூன்று பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியானதால் விளைவுகளை சந்தித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை மல்பெரியில் ஒரு நபர், ஒரு கடை ஊழியருக்கு மிரட்டல் விடுத்த போது, காவல்துறை அதிகாரிகளால் தாக்கப்பட்டுள்ளார்.
காவல்துறையின் அறிக்கையின்படி, சந்தேக நபர் ஒரு துணை அதிகாரியை தரையில் தள்ளி, அவரது தலையின் பின்புறத்தில் குத்தியதால், கைது செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அருகிலுள்ள சாட்சிகளில் ஒருவரால் பதிவு செய்யப்பட்ட சம்பவத்தின் வீடியோ காட்சிகள், மூன்று பொலிஸ் அதிகாரிகள் சந்தேகநபரை இடைவிடாது அடித்து, உதைத்து, முகத்திலும், தலையிலும் சரமாரியாக குத்துவதைக் காட்டுகிறது. அவரது முகம் நடைபாதையின் டார்மாக்கில் ஆழமாக அழுத்தி பிடிக்கப்பட்டிருப்பதும் பதிவாகியுள்ளது.
இரண்டு அதிகாரிகள் சந்தேக நபரின் மேல், காய் விரல்களை மடக்கி அவரை மீண்டும் மீண்டும் குத்துவதைக் காணலாம். மற்றொரு அதிகாரி தனது முழங்காலைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவரின் வயிறு மற்றும் பின்புறத்தில் மீண்டும் மீண்டும் எத்துவதைக் காணலாம்.
NEW ? Arkansas State Police has suspended officers after their video of beating a person outside a convenience store in Crawford County emerged
— Insider Paper (@TheInsiderPaper) August 22, 2022
pic.twitter.com/0rKrZ7nUSU
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி, காவல்துறை அதிகாரிகள் அம்பலப்படுத்தப்பட்ட பிறகு, க்ராஃபோர்ட் கவுண்டி ஷெரிப் ஜிம்மி டாமண்டே, இரண்டு மாவட்ட பிரதிநிதிகள் இடைநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறினார்.
"எனது அனைத்து ஊழியர்களையும் அவர்களின் செயல்களுக்கு நான் பொறுப்பேற்கிறேன், இந்த விஷயத்தில் தகுந்த நடவடிக்கைகளை எடுப்பேன்" என்று டமண்டே கூறினார்.
மேலும், மல்பெரி காவல்துறைத் தலைவர் ஷானன் கிரிகோரி கூறுகையில், சம்பவத்துடன் தொடர்புடைய அவரது அதிகாரிகளில் ஒருவரும் விசாரணையின் முடிவுகள் நிலுவையில் உள்ள நிலையில் விடுமுறையில் அனுப்பப்பட்டார். இந்நிலையில், நடந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது.