மழைக்காலத்தில் உங்கள் தலைமுடிகளுக்கு ஏற்படும் 3 பிரச்சனைகள்: எப்படி தடுக்கலாம்?
பொதுவாக முடி உதிர்தல் பிரச்சனை எல்லா காலங்களிலும் ஏற்படும் ஆனால் மழைக்காலத்தில் அது அதிகரிக்கலாம்.
ஈரப்பதமான காலநிலை உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தை மொத்தமாக பாதித்து , முடி உதிர்தல், பொடுகு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
மழைக்காலத்தில் தலைமுடிக்கு ஏற்படும் பொதுவான 4 பிரச்சனைகள் என்னென்ன என்பதை பற்றி பார்க்கலாம்.
பொடுகு பிரச்சனை
தலைமுடியின் ஆரோக்கியத்தையும் தோற்றத்தையும் தலையில் இருக்கும் பொடுகு பாதிக்கிறது. பெரும்பாலும் மழைக்காலத்தில் அதிக பொடுகு பிரச்சனையை சந்திக்க நேரிடலாம்.
மழைக்காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பது, உங்கள் உச்சந்தலையில் பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கான சரியான சூழலை உருவாக்கி, பொடுகுக்கு வழிவகுக்கும். இது அரிப்பு மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது.
பொடுகு எதிர்ப்பு ஷாம்பூக்களைப் பயன்படுத்துவதன் மூலம் உச்சந்தலையில் கூடுதல் கவனம் செலுத்துவது மற்றும் தலைமுடியை தொடர்ந்து சுத்தம் செய்வதால் பொடுகு ஏற்படுவதைத் தடுக்க உதவும்.
முடி உதிர்தல்
காற்றில் உள்ள அதிகப்படியான ஈரப்பதம் உங்கள் முடியின் வேர்களை வலுவிழக்கச் செய்து, முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும்.
மேலும், மழைநீரில் முடியை மேலும் சேதப்படுத்தும் மாசுகள் இருப்பதால் உச்சந்தலையில் கூடுதல் கவனம் செலுத்தி முடியின் வேர்களை வலுப்படுத்தலாம் மற்றும் மழைக்காலங்களில் முடி உதிர்வதைக் குறைக்கலாம்.
Shutterstock
பூஞ்சை தொற்று
மழைக்காலத்தின் ஈரப்பதமான சூழ்நிலைகள், பூஞ்சை தொற்று, ரிங்வோர்ம் மற்றும் ஸ்கால்ப் சொரியாசிஸ் போன்றவவை ஏற்பட காரணமாகிறது.
இந்த நோய்த்தொற்றுகள் சிவத்தல், அரிப்பு மற்றும் முடி உதிர்தல் பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும்.
உச்சந்தலையில் நல்ல சுகாதாரத்தை பராமரிப்பதன் மூலமும், உலர வைப்பதன் மூலமும், இதுபோன்ற தொற்றுநோய்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |