BTS இசைக்குழுவை காண தென் கொரியா செல்ல முயன்ற பள்ளி மாணவிகள்: காட்பாடியில் பத்திரமாக மீட்பு
தென் கொரிய இசைக்குழுவான BTS-ஐ காண 3 பள்ளி மாணவிகள் தனியாக கிளம்பி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
BTS மோகம்
பிரபல பாப் இசைக்குழுவான BTS-க்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் நிறைந்து இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக சிறுமிகள் முதல் நடுத்தர வயது பெண்கள் வரையிலான ரசிகர்கள் கூட்டம் ஏராளம்.
இவர்களில் சிலர் BTS குழு மீது கொண்ட மோகத்தை வெளிப்படுத்துவதாக தெரிவித்து சில கோமாளி தனங்களை செய்து வருவதும் வழக்கம்.
அந்த வகையில் BTS குழு மீது மோகம் கொண்ட தமிழ்நாட்டை சேர்ந்த 3 அரசு பள்ளி மாணவிகள் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டை விட்டு வெளியேறிய சிறுமிகள்
BTS இசைக்குழு நேரில் பார்ப்பதற்காக வீட்டை விட்டு வெளியேறிய 3 அரசு பள்ளி மாணவிகளும் தென் கொரியாவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
முதலில் ரயில் மூலம் சென்னை சென்று பின் அங்கிருந்து விசாகப்பட்டினம் துறைமுகம் வழியாக தென் கொரியா செல்ல 3 சிறுமிகளும் திட்டமிட்டுள்ளனர்.
8ம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகளும் பள்ளிக்கு செல்வதாக தெரிவித்து விட்டு ரயில் மூலமாக காட்பாடி சென்றுள்ளனர்.
குழந்தைகளை காணவில்லை என பெற்றோர் அளித்த புகாரின் பெயரில் 2 தனிப்படை அமைத்து பொலிஸார் தேடுதல் வேட்டை நடத்தினர்.
இறுதியில் தகவலின் அடிப்படையில், காட்பாடி ரயில் நிலையத்தில் 3 சிறுமிகளை பத்திரமாக ரயில்வே பொலிஸார் மீட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |