கிளீனராக தொடங்கிய வாழ்க்கை: ரூ.3.06 லட்சம் கோடிக்கு சொந்தக்காரரான தடாஷி யானாய்
கடையில் கிளீனராக பணியாற்றிய தடாஷி யானாய் இன்று ஜப்பானின் மிகப்பெரிய பணக்காரர் ஆகியுள்ளார்.
தடாஷி யானாய்
மிகப் பெரிய செல்வந்தர் ஆவதும், மிகப்பெரிய தொழிலதிபர் ஆவதும் அவ்வளவு எளிதல்ல, இன்று மிகப்பெரிய தொழிலதிபராக இருக்கும் அனைவரும் ஒரு காலத்தில் சிறிய முதலீட்டில் சின்னதாய் ஒரு தொழிலை ஆரம்பித்தவர்கள் தான்.
அந்த வரிசையில் ஜப்பானின் மிகப்பெரிய பணக்காரரும், தொழிலதிபருமான தடாஷி யானாயும்(tadashi yanai) இதற்கு விதிவிலக்கல்ல.
MINT
தென்மேற்கு ஜப்பானின் யமசூச்சி மாகாணத்தில் உள்ள உபே மாகாணத்தில் சிறிய ஜவுளிக்கடை உரிமையாளரின் மகனாக பிறந்தவர் தடாஷி யானாய்.
சிறுவயது முதலே தந்தையுடன் ஜவுளிக் கடையில் வளர்ந்ததால் அங்குள்ள கிளீனிங் வேலைகளை பார்த்ததுடன், சிறிய சிறிய வணிக நுணுக்கத்தை தடாஷி கற்றுக் கொண்டார்.
வசேடா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியல் பட்டம் பெற்ற தடாஷி, பல்பொருள் அங்காடி ஒன்றில் பணியாற்றினார்.
அதன் பின்னர் சர்வதேச பயண நிறுவனத்தின் பணிக்கு சேர்ந்தார். ஆனால் இறுதியில் சொந்த ஊருக்கு திரும்பிய தடாஷி, தந்தையின் ஓகோரி ஷோஜி நிறுவனத்தை எடுத்து நடத்த தொடங்கினார்.
ஓகோரி ஷோஜி என்ற நிறுவனத்தின் பெயரை உலகளாவிய அங்கீகாரத்திற்காக பாஸ்ட் ரீடெய்ல் என்று பெயரை மாற்றினார்.
1984ம் ஆண்டு யுனிக்லோவின் முதல் கடையை ஜப்பானின் ஹிரோஷிமாவில் தொடங்கினார்.
கிட்டத்தட்ட 7,300 கோடி டொலர் மதிப்பிலான ஆயுத்த ஆடைகளின் யுனிக்லோ சாம்ராஜ்யத்தின் தாய் நிறுவனம் தான் இந்த பாஸ்ட் ரீடெய்ல் நிறுவனம்.
இந்தியாவில் கால் பதித்த 2 நாட்களிலேயே
கடந்த 2019ம் ஆண்டு யூனிக்லோ நிறுவனம் இந்தியாவின் டெல்லியில் தனது முதல் கடையை திறந்தது.
லண்டனின் பிரம்மாண்ட OWO கட்டிடம்: பளபளக்கும் ஹோட்டலாக மாற்றிய இந்திய குடும்பம்: மிரளவைக்கும் சொத்து மதிப்பு
கடை திறந்த முதல் 2 நாட்களிலேயே யூனிக்லோ நிறுவனம் 2 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது.
இதையடுத்து கத்ரீனா கைப்பை பிராண்ட் தூதராக நியமித்து டெல்லி, மும்பை என 11 கடைகளை இந்தியாவில் யூனிக்லோ நிறுவனம் திறந்தது.
தடாஷி யானாய் சொத்து மதிப்பு
போர்ப்ஸ் தகவல்படி, தடாஷி யானாயின் சொத்து மதிப்பு சுமார் ரூ.3.06 லட்சம் கோடியாகும்.
இதன் மூலம் தடாஷி யானாய் ஜப்பானின் மிகப்பெரிய பணக்காரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Japan's Richest Billionaire, Tadashi Yanai, Japanese clothing brand Uniqlo, Uniqlo, world's largest retailer, billionaire, businessman, money