ஒரே நேரத்தில் 3 நீர்மூழ்கி கப்பல்கள்: பிரித்தானிய ராணுவம் மேற்கொண்டுள்ள அபூர்வ நகர்வு
3 Uk nuclear submarines deployed in sea: கடலில் பிரித்தானியாவின் 3 அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் நிலை நிறுத்தப்பட்டு இருப்பது உலக நாடுகள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
களத்தில் இறங்கிய பிரித்தானியாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள்
பிரித்தானியாவின் அரசு படைகளுக்கு சொந்தமான 4 அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களில் 3 நீர்மூழ்கி கப்பல்கள் ஒரே நேரத்தில் கடலுக்குள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
பிரித்தானியாவின் பாதுகாப்பு அரணாக குறைந்தது ஒரு வேன்கார்ட்-கிளாஸ்(Vanguard-class) அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலானது ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படுவது வழக்கம். பல ஆண்டுகளாக பிரித்தானிய கடற்படை தொழில்நுட்ப மற்றும் பராமரிப்பு சிக்கல்களை எதிர் கொண்டு வந்த நிலையில் 3 நீர்மூழ்கி கப்பல்கள் கடலில் செயல்பாட்டிற்கு கொண்டு வந்து இருப்பது திடீர் மற்றும் மிகப்பெரிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

அத்துடன் இது வழக்கமான நடைமுறைகளில் இருந்து முற்றிலும் முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது.
இந்த நீர்மூழ்கி கப்பல்களின் ரகசிய பயன்பாட்டிற்கான காரணத்தை பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிக்க மறுத்துவிட்டது.
அதே நேரத்தில் பிரித்தானிய ராணுவத்தின் இந்த முன்னெடுப்பை நேட்டோ உறுப்பு நாடுகளும், எதிரி நாடுகளும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
வல்லுநர்களின் கணிப்பின் படி, இது ஏதேனும் பதற்றம் தொடர்பான உடனடி நடவடிக்கை என்பதை விட, வெவ்வேறு பணிகளுக்கான நகர்வாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது.
HMS Victorious என்ற 4வது நீர்மூழ்கி கப்பல் மட்டும் தற்போது Devonport கடற்படை தளத்தில் பராமரிப்பில் உள்ளது.