ரஷ்யாவுக்காக நாசவேலையில் ஈடுபட்ட உக்ரைன் நாட்டவர்கள் மூன்று பேர் கைது
ரஷ்யாவுக்காக நாசவேலையில் ஈடுபட்டதாக உக்ரைன் நாட்டவர்களான மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
மூன்று பேர் கைது
ரஷ்யாவுக்காக நாசவேலையில் ஈடுபட்டதாக ஜேர்மனியில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
Daniil B மற்றும் Vladyslav T என்னும் அந்த இருவருடன், அவர்களுடைய கூட்டாளி என கருதப்படும் Yevhen B என்னும் உக்ரைன் நாட்டவர் சுவிட்சர்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் அவர் ஜேர்மனிக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார்.

Credit : Getty images
ரஷ்ய உளவுத்துறைக்காக வேலை செய்யும் இவர்கள், வெடிபொருட்கள் மற்றும் ட்ராக்கிங் கருவிகள் அடங்கிய பார்சல்களை, ஜேர்மனியின் Cologneஇலிருந்து உக்ரைனுக்கு அனுப்பியுள்ளார்கள். .
கைது செய்யப்பட்டுள்ள Daniil B மற்றும் Vladyslav T ஆகிய இருவர் மீதும், தீவைக்க மற்றும் வெடிபொருட்களைக் கொண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக நேற்று ஜேர்மன் அதிகாரிகள் குற்றச்சாட்டுகள் பதிவு செய்துள்ளார்கள்.
சுவிட்சர்லாந்தில் கைது செய்யப்பட்ட Yevhen B மீது விரைவில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட இருப்பதாகவும் ஃபெடரல் சட்டத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |