ஏலத்தில் எடுக்கப்படாமல் ஐபிஎல் போட்டியில் விளையாடவுள்ள 3 நட்சத்திர வீரர்கள்
ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்படாத 3 வீரர்கள் இந்த ஐபிஎல் போட்டியில் விளையாடும் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர்.
ஐபிஎல் மெகா திருவிழா வரும் 26ஆம் திகதி தொடங்கவுள்ளது. இந்த ஐபிஎல் போட்டியில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன.
கடந்த மாதம் இப்போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கான மெகா ஏலம் நடைபெற்றது. முன்னணி வீரர்கள் பலரை அனைத்து அணிகளும் போட்டி போட்டு பல கோடிகள் செலவழித்து தூக்கின.
அப்படியிருந்தும், ஏலத்தில் எடுக்கப்படாத 3 வீரர்களுக்கு திடீர் ஜாக்பாட் அடித்து, அவர்கள் ஐபிஎல் போட்டி விளையாட உள்ளனர்.
ஆரோன் பின்ச்
ஆரோன் பிஞ்ச், அவுஸ்திரேலியாவின் கேப்டனாகவும், ஐபிஎல்லில் கிட்டதட்ட 8 அணிகளில் விளையாடிவருமான இவரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை. இந்நிலையில் இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸை ஏலத்தில் எடுக்கப்பட்ட போதிலும் ஐபிஎல் பயோ பபிள் விதிமுறைகள் காரணமாக விலகினார். இதையடுத்து அந்த இடத்தில் ஆரோன் விளையாடவுள்ளார்.
ரஹ்மானுல்லா குர்பாஸ்
ஐபிஎல் மெகா ஏலத்தில் ஜேசன் ராயை குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்கியிருந்தது. அவரும் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்ததார். ஐபிஎல் பயோ பபிள் விதிமுறைகளில் உடன்பாடில்லை எனத் தெரிவித்திருந்தார். இவருக்கு பதிலாக சுரேஷ் ரெய்னாவை குஜராத் அணி எடுக்கும் என எதிர்பார்த்திருந்ந நிலையில், ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் ரஹ்மானுல்லா குர்பாஸ் அழைக்கப்பட்டுள்ளார்.
முஜர்பானி
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இடம்பிடிருந்திருந்த மார்க்வுட், காயம் காரணமாக ஐபிஎல் போட்டியில் இருந்து விலகியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இங்கிலாந்து தொடரில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இவருக்கு பதிலாக ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் பிளெஸ்ஸிங் முஜர்பானி வூட்-ஐ லக்னோ நிர்வாகம் அணியில் சேர்த்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.