பிரித்தானிய கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட 3 பெண் சடலங்கள்: அதிர்ச்சியில் உள்ளூர்வாசிகள்
பிரித்தானியாவில் பிரபலமான கடற்கரை பகுதிக்கு அருகே 3 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3 பெண்களின் சடலங்கள் மீட்பு
பிரித்தானியாவின் பிரைட்டன் கடற்கரையின் ஆங்கில கால்வாய் பகுதியில் 3 பெண்களின் உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதன்கிழமை(மே 13ம் திகதி) அதிகாலை 5.45 மணிக்கு மூன்று பெண்களின் பாதுகாப்பு குறித்து அவசர சேவைகளுக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட பகுதியில் ஒருங்கிணைக்கப்பட்ட மிகப்பெரிய தேடுதல் வேட்டையை சசெக்ஸ் காவல்துறையினர் முன்னெடுத்தனர்.

தேடுதல் பணியில் ஏராளமான ரோந்து வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன.
இறுதியில் தேடப்பட்ட 3 பெண்களும் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாகவும், அவர்களின் உடல் மதேரா டிரைவ்(Madeira Drive) அருகே கொண்டு வரப்பட்டு இருப்பதாகவும் சசெக்ஸ் காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
Large search and rescue operation currently off #Brighton seafront @HMCoastguard helicopter and 2 lifeboats @SLifeboatRNLI @RNLIBrighton 13/5/26 pic.twitter.com/W4MYzgxwRC
— Oliver Button (@OBDroning) May 13, 2026
உயிரிழந்த பெண்களின் அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அவர்கள் மூவரும் கடலுக்குள் சென்றார்களா என்ற கோணத்திலும் அல்லது வேறு யாரும் அவர்களை கொலை செய்தார்களா என்ற கோணத்தில் பொலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |