2 குழந்தைகள் உட்பட 8 பேர்., லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 8 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்
இஸ்ரேல் - லெபனான் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் இருக்கும் நேரத்தில், IDF படைகள் தொடர்ந்து லெபனான் நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
அந்த வகையில் புதன்கிழமை தெற்கு பெய்ரூட் நெடுஞ்சாலையில் இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதலில் 8 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகாலையில் இஸ்ரேல் 3 வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்ததாகவும், அவை கடற்கரை நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்களை தாக்கியதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெபனான் நாட்டு அதிகாரிகள் வழங்கிய தகவலின் படி, உயிரிழந்தவர்களில் 2 குழந்தைகளும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேலிய ராணுவம் எந்தவொரு அறிக்கையை இதுவரை வெளியிடவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |