காத்தாடி மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து 3 வயது சிறுமி மரணம்
குஜராத்தில் காத்தாடி மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு சம்பவம்
உத்தராயண கொண்டாட்டங்களுக்கு மத்தியில் குஜராத்தின் வெவ்வேறு நகரங்களில் சனிக்கிழமையன்று இரண்டு வெவ்வேறு சம்பவங்களில், 3 வயது சிறுமியும் 35 வயது ஆணும் காத்தாடி நூலால் கழுத்து அறுக்கப்பட்டு உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
3 வயது குழந்தை
கிருஷ்ணா தாக்கூர் (3) மதியம் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள விஸ்நகர் நகரில் தனது தாயுடன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது, அவரது கழுத்தில் காத்தாடி நூல் சிக்கி தொண்டை அறுபட்டதால் உயிரிழந்ததாக காவல்துறை மற்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது சிறுமி இறந்துவிட்டார்.
மற்றோரு நபர் மரணம்
மற்றொரு சம்பவத்தில், சுவாமிஜி யாதவ் (35), வதோதரா நகரில் உள்ள சானி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, காத்தாடி நூலால் கழுத்து அறுக்கப்பட்டதில் உயிரிழந்தார்.
குஜராத் முழுவதும் நாள் முழுவதும் காத்தாடி கம்பிகளால் பலர் காயமடைவதாக பல வழக்குகள் பதிவாகியுள்ளதாக 108 அவசர மருத்துவ சேவைகள் (இஎம்எஸ்) அமைப்பின் அதிகாரிகள் கூறுகின்றனர்.