லண்டனில் 3 வயது சிறுவனின் மர்ம மரணம்: இருவர் மீது கொலை குற்ற வழக்கு பதிவு
பிரித்தானியாவில் 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் 2 பேர் மீது கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இருவர் மீது கொலை குற்றச்சாட்டு
தென்கிழக்கு லண்டனில் இஷையா ஹென்றி(Isiayah Henry) என்ற 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் இரண்டு பேர் மீது கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மெட்ரோபொலிட்டன் பொலிஸாரின் தீவிர விசாரணைகளுக்கு பிறகே இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது.

என்ன நடந்தது?
3 வயது சிறுவன் இஷையா ஹென்றி கடந்த ஜனவரி 3ம் திகதி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், காயம் குறித்து சந்தேகம் எழுந்த மருத்துவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் வழங்கினர்.
அதன்படி மெட்ரோபொலிட்டன் பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பாக முதற்கட்ட விசாரணையை தொடங்கினர்.
அதே நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி ஜனவரி 19ம் திகதி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து இந்த விவகாரம் கொலை குற்றவியல் விசாரணையாக மாறியது.
விசாரணையை தீவிரப்படுத்திய பொலிஸார் வுல்விச் பகுதியை சேர்ந்த தனிஷா ஹென்றி(28), மற்றும் சவுத்வார்க் பகுதியை சேர்ந்த(30) மைக்கேல் வில்லியம்ஸ் என்ற இருவர் மீது பொலிஸார் கொலை குற்ற வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இருவரின் மீதான வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வுல்விச் கிரவுண் நீதிமன்றத்தில் ஏப்ரல் 22ம் திகதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |