மிளகாய் தூள் தூவி 3 வயது சிறுவனை கடத்திய கும்பல்: சில மணி நேரத்தில் சிறுவனை மீட்ட பொலிஸார்
பட்டபகலில் 3 வயது சிறுவன் மிளகாய் பொடி தூவி காரில் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3 வயது சிறுவன் கடத்தல்
தமிழ்நாட்டின் வேலூரில் உள்ள குடியாத்தம் பகுதியில் வீட்டில் இருந்த 3 வயது சிறுவனை தலைக்கவசம் அணிந்த மர்ம நபர் காரில் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யோகேஷ் என்று அடையாளம் காணப்பட்டுள்ள சிறுவன் மற்றும் அவரது தந்தை வேணுவுடன் மதிய உணவுக்காக வீட்டுக்கு சென்ற போது வெள்ளை காரில் வந்த தலைக்கவசம் அணிந்த மர்ம நபர் வீட்டிற்குள் நுழைந்து சிறுவனை தூக்கி சென்றுள்ளார்.
மகனை காப்பாற்ற முயன்று தோல்வியடைந்த தந்தை செய்தியாளர்களிடம் கண்ணீருடன் பேசிய போது, தலைக்கவசம் அணிந்த நபர் தன்னுடைய கண்களில் மிளகாய் பொடி தூவி விட்டு மகனை தூக்கி சென்றதாக தெரிவித்தார்.
3 மணி நேரத்தில் மீட்கப்பட்ட சிறுவன்
இதையடுத்து சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு தனிப்படை பொலிஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் கடத்தல்காரர்கள் கர்நாடக பதிவு எண் கொண்ட காரை பயன்படுத்தி இருப்பதாக தெரியவந்தது.
அதே நேரத்தில் கடத்தல்காரர்கள் மாதனூர் என்னும் இடத்தில் சிறுவனை இறக்கி விட்டு தப்பிச் சென்ற நிலையில் சிறுவன் பொலிஸாரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |