டிரம்ப் ஒரு வணிகர்! கச்சா எண்ணெய் விற்பனை தொடர்பாக ரஷ்யா பதிலடி
டிரம்ப் ஒரு வணிகர் எனவே தான் அமெரிக்க எண்ணெயை விற்பனை செய்ய உலக நாடுகளை வற்புறுத்துவதாக புடினின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் குற்றம் சாட்டியுள்ளார்.
நெருக்கடி கொடுக்கும் டிரம்ப்
சமீபத்தில் உக்ரைன் ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு ஐரோப்பிய நாடுகள் முதலில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் ரஷ்யாவிடம் இருந்து சலுகை விலையில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மீது 50% வரி விதித்து இருநாட்டு உறவில் அதிர்வலைகளை ஏற்படுத்தினார்.
டிரம்புக்கு ரஷ்யா பதிலடி
இந்நிலையில் டிரம்பின் நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், “டிரம்ப் ஒரு வணிகர்” எனவே தான் கச்சா எண்ணெய் விற்பனையில் அமெரிக்காவுக்கு சாதகமாக செயல்படுமாறு உலக நாடுகளை கட்டாயப்படுத்துகிறார் என குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்காவும், ரஷ்யாவும் எரிசக்தி கொள்கையில் வேறுபாடுகள் கொண்டு இருந்தாலும், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உண்மையாக செயல்பட விரும்புகிறார் என விளாடிமிர் புடின் நம்புவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் புடின் மற்றும் டிரம்ப் இருவரும் நல்ல நண்பர்களாகவும், முக்கிய கருத்துக்களை பகிர்ந்து கொண்டு இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |