நீட் தேர்வில் 99.99% மதிப்பெண்: கடிதம் எழுதிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட மாணவர்
மகாராஷ்டிர மாநிலத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
99.99 சதவீதம் மதிப்பெண் பெற்ற மாணவர்
மகாராஷ்டிராவின் சந்திராபூர் மாவட்டம் நவர்கான் சேர்ந்த அனுராக் அனில் போர்க்கர் என்ற 19 வயது மாணவர் நீட் UG 2025 தேர்வை எழுதியுள்ளார்.
திறமையான மாணவரான அனுராக் நீட் தேர்வில் சுமார் 99.99 சதவீத மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார்.
இந்திய அளவில் OBC பிரிவில் 1475வது இடத்தை பிடித்து சாதனை படைத்ததன் மூலம் அனுராக் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான வாய்ப்பையும் பெற்றார்.
இதையடுத்து உத்தரபிரதேசம் மாநிலம் கோரக்பூர் மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கான முயற்சிகளிலும் அனுராக் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
உயிரை மாய்த்துக் கொண்ட மாணவர்
இந்நிலையில் கோரக்பூர் மருத்துவ கல்லூரியில் சேர்வதற்காக வீட்டில் இருந்து புறப்படும் நாளில் அனுராக் தன்னுடைய வீட்டிலேயே உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.
சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகள், வீட்டில் இருந்து கடிதம் ஒன்றை கைப்பற்றி இருப்பதாகவும், அந்த கடிதத்தில் அனுராக் தனக்கு மருத்துவ படிப்பில் சேர விருப்பம் இல்லை என்றும் குறிப்பிட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக நவர்கான் காவல்துறை அதிகாரிகள் தொடர் விசாரணையை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |