நேற்று கன்னியில் நுழைந்த புதன்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.
இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
அந்தவகையில், புதன் செப்டம்பர் 15ஆம் திகதி அதாவது நேற்று தனது சொந்த ராசியான கன்னி ராசிக்குள் நுழைந்தார்.
இந்நிலையில், புதனின் சொந்த ராசி பயணத்தால் பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்றான பத்ரா ராஜயோகம் உருவானது.
இதனால் குறிப்பிட்ட 3 ராசிகள் மிகச்சிறந்த நற்பலன்களை பெறப்போகின்றனர்.
தனுசு
- செல்வம் இருமடங்கு வேகத்தில் அதிகரிக்கும்.
- பரம்பரை சொத்து கைக்கு வந்து சேரும்.
- சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
- திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
- சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
- சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
- குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
சிம்மம்
- பேச்சுத் திறன் அதிகரிக்கும்.
- பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும்.
- முக்கியமான வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
- மார்கெட்டிங், ஊடகம், வங்கி போன்ற துறையில் நல்ல லாபம் கிடைக்கும்.
- நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- இக்காலத்தில் சொந்த அடையாளத்தை உருவாக்குவார்கள்.
மகரம்
- தொழிலில் பல சாதகமான பலன்களை பெறுவீர்கள்.
- புதிய வருமான வழிகள் திறக்கும்.
- பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும்.
- வேலை தொடர்பாக வெளிநாட்டு பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
- தொழிலதிபர்கள் எதிர்பாராத அளவில் லாபம் பெறுவார்கள்.
- மாணவர்கள் படிப்பிற்காக வெளிநாடு செல்ல வாய்ப்புள்ளது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |