மிதுனத்திற்கு மாறும் சூரியன்.., அதிக பணத்தை சம்பாதிக்கப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களில் சூரியன் மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக பார்க்கப்படுகிறார்.
இந்நிலையில், சூரியன் ஜூன் 15ஆம் திகதி ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகப்போகிறார்.
இந்த மிதுன ராசியின் அதிபதி புதன். எனவே புதன் ராசியில் சூரியன் செல்வதால் அதன் தாக்கம் 12 ராசிகள் மீதும் ஏற்படும்.
அந்தவகையில், மிதுனத்திற்கு மாறும் சூரியனால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
மேஷம்
- தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- முக்கிய முடிவுகளை எடுக்கும் திறன் மேம்படும்.
- வருமானம் அதிகரிக்கும்.
- இதன் மூலம் நிதி நிலைமை மேம்படும்.
- குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
- அரசு தொடர்பான வேலைகளில் நல்ல லாபம் கிடைக்கும்.
- புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
- நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடியும்.

மிதுனம்
- பொருள் வசதிகள் அதிகரிக்கும்.
- தலைமைத்துவ திறன்கள் மேம்படும்.
- பணியிடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
- பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு சிறப்பாக இருக்கும்.
- வருமானத்தில் உயர்வு ஏற்படும்.
- மன அழுத்தம் குறையும்.

சிம்மம்
- நிதி ரீதியாக நன்றாக இருக்கும்.
- புதிய வருமான வழிகள் உருவாகும்.
- முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
- நிதி நிலைமை வலுவடையும்.
- பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
- தொழிலதிபர்கள் லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
- நீண்ட நாள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
- தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |