சூரியனால் உருவாகும் அசுப யோகம்.., இழப்பை சந்திக்கப்போகும் 3 ராசிகள்
சூரியன் வருகிற ஏப்ரல் 14ஆம் திகதி மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்குள் நுழையவுள்ளார்.
இப்படி மேஷ ராசியில் சூரியன் நுழைவதால் தமிழ் மாதமான சித்திரை பிறக்கவுள்ளது. அதோடு புதிய தமிழ் ஆண்டான பராபவ வருடம் பிறக்கப் போகிறது.
ஜோதிட கணக்கீடுகளின் படி, இந்த நாளில் சூரியன் மற்றும் சந்திரனின் நிலையால் வைத்ருதி யோகம் உருவாகவுள்ளது.
இந்த யோகமானது மிகவும் அசுப யோகமாகும். அதுவும் இந்த யோகம் மே 14ஆம் திகதி வரை நீடித்திருக்கும்.
அந்தவகையில், இந்த அசுப யோகத்தினால் குறிப்பிட்ட 3 ராசிகள் துன்பங்களை பெறப்போகின்றனர்.
மேஷம்
- வாழ்க்கையில் பல மோசமான விளைவுகளை சந்திப்பார்கள்.
- புதிய முதலீடுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
- பெரிய இழப்புக்களை சந்திக்க நேரிடும்.
- ஆரோக்கிய பிரச்சனைகளால் சிரமப்படக்கூடும்.
- தலைவலி, மன அழுத்தம், தூக்கமின்மை போன்றவை ஏற்படும்.
- வாயைக் கட்டுப்படுத்த வேண்டும்.
- அன்புக்குரியவர்களுடனான உறவில் விரிசல் ஏற்படும்.

கடகம்
- பொறுமை அதிகமாக சோதிக்கப்படும்.
- பண விடயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
- குறுக்கு வழியில் பணத்தை சம்பாதிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
- பணியிடத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
- வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும்.

தனுசு
- தொழில் ரீதியாக பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள்.
- குடும்பத்தில் வாக்குவாதங்கள் அதிகரிக்கும்.
- புதிய வேலைகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
- பெற்றோருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
- மற்றவர்களின் ஆலோசனைகளைப் புறக்கணிக்காதீர்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |