மீன ராசிக்கு செல்லும் சூரியன்.., கவனமாக இருக்கவேண்டிய 3 ராசிகள்
நவகிரகங்களில் சூரியன் மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக பார்க்கப்படுகிறார்.
அந்தவகையில், தற்போது சூரியன் சனி பகவானின் ராசியான கும்ப ராசியில் உள்ளார்.
இந்நிலையில், சூரியன் வருகிற மார்ச் 15ஆம் திகதி குரு பகவானின் ராசியான மீன ராசிக்குள் நுழையவுள்ளார்.
மீன ராசியில் ஏற்கனவே சனி பகவானும் உள்ளதால் இவர்களின் சேர்க்கை குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு துன்பங்களை தரப்போகிறது.
சிம்மம்
- வேலையில் சவால்களை எதிர்கொள்வார்கள்.
- திடீரென்று செலவுகள் அதிகரிக்கும்.
- வேறு வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
- புதிய வேலையை தொடங்குவதை தவிர்ப்பது நல்லது.
- ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்படக்கூடும்.
- மிகுந்த உடல் சோர்வை சந்திப்பீர்கள்.
- மனநிலையில் ஏற்ற இறக்கங்களை சந்திப்பீர்கள்.

விருச்சிகம்
- தொழிலில் பல சிரமங்களை சந்திக்க நேரிடும்.
- படைப்பாற்றல் குறையும்.
- தொழிலில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
- அஜாக்கிரதை பல பிரச்சனைகளை சந்திக்க வைக்கும்.
- தோல்விகளை சந்திக்க நேரிடும்.
- மாணவர்கள் பல சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

மீனம்
- ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
- எதிலும் அவசரத்தைக் கைவிட வேண்டும்.
- மனநிலையில் நிறைய குழப்பங்கள் ஏற்படும்.
- தன்னம்பிக்கை குறையும்.
- பணியிடத்தில் போட்டிகள் அதிகாரிக்கும்.
- காதல் வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கும்.
- பொறுமையை கையாண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |