பக்முட் நகரில் குவிக்கப்பட்ட வீரர்கள்: 30,000 ரஷ்ய வீரர்களை துடைத்தெறிந்த உக்ரைன்
கிழக்கு உக்ரைனிய நகரான பக்முட்-டை கைப்பற்ற முயன்ற ரஷ்ய வீரர்களில் 30,000 பேர், தாக்குதலில் உயிரிழந்து இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்முட்டில் தொடரும் சண்டை
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் ஓராண்டை தாண்டி நடைபெற்று வரும் நிலையில், கிழக்கு உக்ரைனில் நகரில் தற்போது போர் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது.
இது தொடர்பாக முன்னாள் உளவுத்துறை அதிகாரி கூறுகையில், பக்முட் சிறிய முக்கியமற்ற நகரம், இது முன் வரிசையில் சுமார் 745 மைல் (1,200 கி மீ) தொலைவில் உள்ளது.
Sky News
அத்துடன் ரஷ்யர்கள் அதை கிராமடோர்ஸ்க் மற்றும் ஸ்லோவியன்ஸ்க் ஆகியவற்றிற்குச் செல்வதற்கான ஒரு படியாக பார்க்கிறார்கள், எனவே இந்த டான்பாஸ் பிராந்தியத்தின் எஞ்சிய பகுதியைக் கைப்பற்ற முயற்சிக்க இதை முன்னோக்கி நகர்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
30,000 வீரர்கள் உயிரிழப்பு
கடும் போட்டி நிலவும் நகரமான பாக்முட்டில் லட்சக்கணக்கான ரஷ்ய துருப்புகள் களமிறக்கப்பட்டு தாக்குதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
Sky News
இந்நிலையில் பாக்முட் நகரைக் கைப்பற்ற களமிறங்கிய 30,000 ரஷ்ய வீரர்களை உக்ரைனிய படைகள் கொன்று குவித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.