அமெரிக்க அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ: 30 இந்திய மாணவர்களுக்கு பாதிப்பு
அமெரிக்காவிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் பற்றிய தீயில் சுமார் 72 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் சுமார் 30 பேர் இந்திய மாணவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள Tallahassee நகரில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் கடந்த புதன்கிழமை, அதாவது, நவம்பர் மாதம் 19ஆம் திகதி பயங்கர தீவிபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

அந்தக் கட்டிடத்தில் தங்கியிருந்தவர்களில் 53 பேர் சர்வதேச மாணவர்கள். அவர்களில் சுமார் 30 இந்திய மாணவர்கள் அந்த தீவிபத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தீயில் சிக்கி பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய மாணவர்களில் ஒருவர் பிரீத் ஹர்சோதா (27), மற்றொருவர் முகம்மது ஆமீர் ஹுசைன் (23).

கட்டிடம் தீப்பற்றியதில் வாசலிலும் தீப்பற்றி எரிய, சிலர் ஜன்னல் வழியாக குதித்துள்ளார்கள்.
இரண்டாவது மாடியிலிருந்து குதித்தவர்களில் சுஜன் ஸ்வாமி என்னும் இந்திய மாணவரும் ஒருவர். அவர் கால் உடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தீயில் சிக்கி உயிரிழப்பதிலிருந்து தப்ப ஜன்னல் வழியாக குதிப்பதே ஒரே வழி என்பதாலேயே தான் ஜன்னல் வழியாக குதித்ததாக தெரிவிக்கிறார் சுஜன்.
இதற்கிடையில், அந்த கட்டிடத்திலிருந்து 72 பெரியவர்கள், ஒரு குழந்தை மற்றும் ஒரு செல்லப்பிராணி மீட்கப்பட்டதாகவும், அவர்களில் 52 பேர் ப்ளோரிடா மாகாணப் பல்கலை மாணவர்கள் என்றும் அமெரிக்க செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |