ஹாங்காங்கில் 2000 வீடுகளை சூழ்ந்த பயங்கர தீ: பெரும் பீதியில் குடியிருப்புவாசிகள்!
ஹாங்காங்கில் பல அடுக்கு குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
குடியிருப்பு வளாகத்தில் தீ விபத்து
ஹாங்காங்கின் டாய் போ மாவட்டத்தில் வாங் ஃபுக் கோர்ட்(Wang Fuk Court) என்ற விரிவான குடியிருப்பு வளாகத்தில் புதன்கிழமை பயங்கரமான தீ விபத்து சம்பவம் அரங்கேறியுள்ளது.

9 குடியிருப்பு தொகுதிகளையும், சுமார் 2000 வீடுகளையும் கொண்ட வளாகம் தீயினால் விரைவில் முற்றிலுமாக சூழப்பட்டுள்ளது.
இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தின் காரணமாக குறைந்தது 4 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தீ விபத்து தொடர்பாக உள்ளூர் நேரப்படி மதியம் 2.51 மணிக்கு புகார்கள் பதிவான நிலையில், மாலை 5 மணி அளவில் மொத்தம் 7 பேர் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், அதில் ஒருவர் தற்போது சீராக இருப்பதாகவும் ஹாங்காங் அரசால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்து இவ்வளவு வேகமாக பரவுவதற்கு குடியிருப்பு கட்டிடத்தின் வெளிப்புறத்தில் இருந்த மூங்கில் சாரக்கட்டுகள் முக்கிய காரணமாக இருந்து இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |