வங்கதேசத்தில் 30% இட ஒதுக்கீடு ரத்து! மாணவர்கள் போராட்டம் கைவிடப்படுமா?
வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக வெடித்த போராட்டத்தின் எதிரொலியாக 30% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் வெடித்த போராட்டம்
வங்கதேச நாட்டில் அரசு வேலைகளில் விடுதலைப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 30% இடஒதுக்கீடு முறைக்கு எதிராக மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தின் போது டாக்கா பல்கலைக்கழகத்தில் வன்முறை வெடித்ததை தொடர்ந்து நாடு முழுவதும் பதட்டங்கள் அதிகரித்தன.
கிட்டத்தட்ட 130 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் பலர் படுகாயமடைந்தனர்.
இட ஒதுக்கீடு ரத்து
இந்நிலையில் அரசு வேலைகளில் விடுதலைப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 30% இடஒதுக்கீடு முறையை ரத்து செய்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும் மாணவர்கள் போராட்டங்களை கைவிடுமாறும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஏற்கனவே இந்த போராட்டங்களின் காரணமாக இந்தியா உட்பட பல சர்வதேச நாடுகளை சேர்ந்த மாணவர்கள் வங்கதேசத்தை விட்டு தற்காலிகமாக வெளியேறிய தொடங்கியுள்ள நிலையில் இந்த தீர்ப்பு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |