மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழப்பு
மகா கும்பமேளாவில் புனித நீராட கோடிக்கணக்கான மக்கள் திரண்டதால் கடும் நெரிசலில் ஏற்பட்டு 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
30 பேர் உயிரிழப்பு
இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் நிரஞ்சனி அகாடாவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இங்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதில் இருந்து சாமியார்கள், பக்தர்கள் என லட்சக்கணக்கானோர் பங்கேற்று வருகின்றனர்.
ரூ.70 கோடியில் இருந்து 15 நிமிடங்களில் எண்ணக்கூடிய பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள்! இன்ப அதிர்ச்சி கொடுத்த நிறுவனம்
இந்நிலையில் நேற்று மவுனி அமாவாசை என்பதால் மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்கு பக்தர்கள் திரண்டு வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுது.
புனித நீராடும் சங்கம் காட் பகுதிக்கு அருகே இருந்த தடுப்பு கட்டை உடைந்தது. இதனால், பல பக்தர்கள் காயமடைந்தனர். வட இந்தியாவில் மக மாதத்தில் வரும் அமாவாசையை, மவுனி அமாவாசை என்று அழைப்பார்கள்.
இதனால் நேற்று மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் 10 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடுவர் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அந்தவகையில், நேற்று அதிகாலை முதலே லட்சக்கணக்கான மக்கள் புனித நீராடுவதற்கு குவிந்தனர். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கிய சிலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. சிலர் கீழே விழுந்தனர். பின்னர், அவர்கள் மீது மற்றவர்களும் விழுந்தனர்.
பின்னர், பொலிஸார் , தீயணைப்பு வீரர்கள், துணை ராாணுவப் படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர் விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களை மீட்டனர்.
இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்துள்ளனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மகா கும்பமேளாவில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |