போராட்டத்தில் ஈடுபட்ட 30 ரோபோட்கள் - பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர்
30 robots protest in poland demand stricter ai rules: போலந்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 30 ரோபோட்களை சந்தித்த அமைச்சர், போராட்ட ஒருங்கிணைப்பாளருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்ட 30 ரோபோட்கள்
வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால், ஐடி உள்ளிட்ட துறைகளில் மனிதர்கள் வேலை இழப்பை சந்தித்து வருகின்றனர்.
இந்த சூழலில் AI மற்றும் ரோபோமயமாக்கல் தொழிலாளர் சந்தையை எவ்வாறு பாதிக்கின்றன என்பது குறித்த விவாதத்தைத் தொடங்குவதை நோக்கமாகக் கொண்ட 'Democratism' என்ற அமைப்பின் முன்னெடுப்பால் ரோபோட்களை வைத்து போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
போலந்தின் டிஜிட்டல் விவகாரங்கள் அமைச்சகத்திற்கு வெளியே சுமார் 30 ரோபோட்கள் கையில் வாசகங்கள் அடங்கிய வெள்ளை கொடியினை பிடித்தபடி போராட்டத்தில் ஈடுபட்டன.

இதில், மனித வடிவிலான ரோபோட்கள், 4 கால்களை உடைய உயிரினங்களின் வடிவிலான ரோபோட்கள் பங்குபெற்றன.
ரோபோட்க்கள் அணிவகுத்துச் சென்றபோது, ஒலிபெருக்கிகளில் “பணியிடங்களைப் பாதுகாப்போம்”, “விதிமுறைகளுக்கான நேரம்” மற்றும் “காத்திருக்க வேண்டாம், ஒழுங்குபடுத்துங்கள்” உள்ளிட்ட முழக்கங்கள் ஒலிபரப்பப்பட்டன.
AI-powered robots are protesting AI replacing human workers.😭
— Cosmos Europa (@CosmosEuropa) September 10, 2026
The bizarre protest reportedly took place in Poland.
We really have robots out here fighting for human jobs.
The future is getting weird. pic.twitter.com/9ziSQX1K05
"மேம்பட்ட ரோபோட்டிக்ஸ் என்பது இனி ஒரு எட்டாக்கனி அல்ல. இந்தத் தொழில்நுட்பம் ஏற்கனவே யதார்த்தமாகிவிட்டது என்பதைக் காட்டுவதற்காகவே இந்தப் போராட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது," என செயற்கை நுண்ணறிவால் இயங்கும் மனித உருவ ரோபோட்க்களில் ஒன்றான அகிபோட் ஏ3 கூறியது.
நேரில் சந்தித்த அமைச்சர்
போராட்டத்தில் ஈடுபட்ட ரோபோட்களை சந்தித்த போலந்தின் டிஜிட்டல் விவகாரங்கள் அமைச்சர் கிறிஸ்டோஃப் காவ்கோவ்ஸ்கி, போராட்டத்தினை ஒருங்கிணைத்த குலிஸுடன் பேசினார்.

இது குறித்து பேசிய அவர், "ரோபோமயமாக்கல் முன்னேறிச் செல்லும்போது தொடர்ந்து பரிணாம வளர்ச்சி அடையும் மனித உருவ ரோபோக்களில் செயல்படுத்தப்படும் கட்டுப்பாடற்ற AI மாதிரிகள் ஒரு பெரும் பிரச்சனையாகும் என கூறினார்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் வீக்ரீ என்ற ஆள்சேர்ப்பு நிறுவனத்தின் தலைவராகவும் குலிஸ் இருக்கிறார்.
மேலும், ரோபோடிக்ஸ் நிறுவனத்தின் தலைமைத் தகவல் அதிகாரியாக உள்ள இவர், குடும்பம், தொழிலாளர் மற்றும் சமூகக் கொள்கை அமைச்சகத்தின் தொழிலாளர் சந்தைக் குழுவில் 2 முறை பதவி வகித்துள்ளார்.
இது குறித்து பேசிய அதன் அமைப்பாளரான கிரிகோர்ஸ் குலிஸ், "அறிவாற்றல் பணிகளில், மனித உருவ ரோபோக்களாலும் செயற்கை நுண்ணறிவாலும் மனிதர்களுக்குப் பதிலாக வரக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்த பிரச்சினையை நாங்கள் குறிப்பாகக் கையாள விரும்புகிறோம்.

நாம் இப்போது எதிர்வினையாற்றாவிட்டால், விரைவில் ஒரு சிக்கலை எதிர்கொள்ள நேரிடலாம். தொழிலாளர்களைப் பாதுகாக்கும் ஒரு கேடயமாகச் செயல்படும் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் அவசியம்.
தனிப்பட்ட முறையில் எங்களை அச்சுறுத்தும் வேகமான மற்றும் மாறும் தொழில்நுட்ப மாற்றங்கள் குறித்து சமூகத்திற்குத் தெரிவிக்கத் தொடங்குவது எங்கள் பொறுப்பு என்று நாங்கள் உணர்கிறோம்" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |