ரஷ்யாவிடம் இருந்து 30 கிராமங்கள் விடுவிப்பு: உக்ரைன் ராணுவத்தை பாராட்டிய ஜெலென்ஸ்கி
ரஷ்ய படைகள் கட்டுப்பாட்டில் இருந்த 30 குடியிருப்புகளை உக்ரைனிய படைகள் மீட்டுள்ளனர்.
புதிய ஆயுதங்களுக்காக உக்ரைன் கெஞ்சுவதால், தாக்கக்கூடிய தோற்றத்தையாவது உருவாக்க முயற்சிப்பதாக ரஷ்யா குற்றச்சாட்டு.
ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த கார்கிவ் பகுதியின் 30க்கும் மேற்பட்ட மக்கள் குடியிருப்புகளை உக்ரைன் ராணுவம் விடுவித்துள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
உக்ரைன் ரஷ்யா போர் 182 நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது, உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷ்ய படைகள் கைப்பற்ற தவறியதை தொடர்ந்து, தற்போது உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
ரஷ்ய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவம் சரியான எதிர்ப்பு தாக்குதலை நடத்தி வருவதால், ரஷ்ய படைகளின் முன்னேற்றம் நிதானம் அடைந்துள்ளது.
இந்தநிலையில் ரஷ்ய கட்டுப்பாட்டில் இருந்த கார்கிவ் பகுதியில் இருந்து 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை உக்ரைன் ராணுவம் விடுவித்துள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
அத்துடன் உக்ரைனிய படைகள் நாட்டின் பல பகுதிகளில் தங்களது வெற்றிகரமானத் தாக்குதலை தொடர்கின்றனர் எனத் தெரிவித்தார்.
EPA
மேலும் செப்டம்பர் தொடக்கத்தில் இருந்து ஆயிரம் சதுரகிலோமீட்டர்களுக்கு உக்ரைனில் ரஷ்ய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை உக்ரைனிய ராணுவம் மீட்டெடுத்ததாக வியாழன்கிழமை உக்ரைன் தலைவர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.
கூடுதல் செய்திகளுக்கு: போட்டோஷூட்டுக்கு தாமதித்த பிரித்தானிய மகாராணி: கிரீடத்தை கழற்றுமாறு கூறிய புகைப்பட கலைஞர்!
இது தொடர்பாக ரஷ்யா தெரிவித்துள்ள தகவலில், உக்ரைனிய துருப்புகள் எந்த முன்னேற்றமும் செய்யவில்லை, புதிய ஆயுதங்களுக்காக உக்ரைன் மேற்கத்திய நாடுகளிடம் கெஞ்வதால் உக்ரைன் தாக்கக்கூடிய தோற்றத்தையாவது உருவாக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டியது.