30 வருட ரத்தத் துளி., தீர்க்கப்படாத இரட்டைக்கொலை வழக்கில் சந்தேக நபர் கைது!
அமெரிக்காவில் 30 வருட பழமையான ரத்தத்துளியின் மூலம் தீர்க்கப்படாத கொலை வழக்கில் இப்போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் Vermont மாநிலத்தில் Danby நகரத்தில் இந்த சம்பவம் நடந்தது.
1989-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் திகதி, ஜார்ஜ் பீகாக் (76) மற்றும் கேத்தரின் பீகாக் (73) தம்பதியினர் அவர்கள் வீட்டில் கத்தியால் குத்தி செய்யப்பட்டனர்.
ஆனால், வீட்டின் கதவு உடைக்கப்பட்டதாகவோ, அத்துமீறல்கள் நடந்ததாகவோ, பொருட்கள் திருடுபோனதாகவோ அல்லது வேறு எந்த தடயங்களும் சாட்சியங்களும் கிடைக்கவில்லை.
CNN
இரண்டு வாரங்களுக்கு பின், தம்பதியின் இரண்டு மகள்களில் ஒருவரை திருமணம் செய்துகொண்ட நபரான மைக்கேல் அந்தோணிக்கு லூயிஸ் (Michael Anthony Louise) மீது சந்தேகம் எழுந்தது. அந்த நேரத்தில் சேகரிக்கப்பட்ட சூழ்நிலை ஆதாரங்கள், இந்த இரட்டைக் கொலைக்கும் அவருக்கும் தொடர்பு இருப்பதாக காட்டின.
இருப்பினும், மைக்கேல் அந்தோணி தான் கொலையாளி என தீர்மானிக்க, துப்பறியும் நபர்களால் உறுதியான தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை.
மேலும், வேறு எந்த ஆதாரங்களும் இல்லை என்பதால், வழக்கு முன்னேற்றம் இல்லாமல் பல ஆண்டுகளாக முடிக்கபடாமல் இருந்தது.
CNN
ஆனால், 2020 மே மாதத்தில், சம்பவ நடந்தபோது மைக்கேல் அந்தோணியின் காரில் இருந்து ஆதாரமாக சேகரிக்கப்பட்ட ஒரு துளி ரத்தத்தை கொண்டு டிஎன்ஏ சோதனை செய்தபோது, அது கொல்லப்பட்ட ஜார்ஜ் பீகாக்கின் உதிரம் என உறுதிசெய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்த வாரம் வியாழனன்று (அகடோபர் 13) Vermont பொலிஸார் மைக்கேல் அந்தோணியை நியூ யார்க்கின் Syracuse பகுதியில் கைது செய்தனர்.
இதே ரத்தத்துளியை 1989-லேயே பரிசோதனை செய்தனர், ஆனால் அந்த ரத்தத்துடன் கொலை செய்யப்பட்டவர்களுடன் திடமாக தொடர்புபடுத்தமுடியவில்லை. சமீப காலங்களில் தொழில்நுட்ப முன்னேற்றத்தினால் இப்போது இந்த வழக்கு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது.
CNN
சந்தேக நபரை உறுதி செய்தாலும், பொலிஸார் அந்தோணியை வியாழக்கிழமை தான் தேடிப்பிடித்து கைது செய்தனர். அவருக்கு இப்போது 79 வயது.
அவரை கைது செய்ய இரண்டு ஆண்டுகள் தாமதமானதை குறித்து காவல்துறையினர் எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை. மேற்பட்ட விசாரணைக்குப் பின் கூடுதல் தகவல்கள் வெளியாகும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.