பிரித்தானியாவில் பதிவான 300 நிலநடுக்கங்கள்... மிகவும் பாதிக்கப்பட்ட பகுதி இதுதான்
வெளியான சமீபத்திய தரவுகளின் அடிப்படையில், இந்த ஆண்டு பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்து முழுவதும் 300-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளது.
இரண்டு மிகப்பெரிய
பெர்த்ஷயர் மற்றும் மேற்கு ஹைலேண்ட்ஸ், வேல்ஸின் தெற்குப் பகுதிகள், அத்துடன் யார்க்ஷயர் மற்றும் லங்காஷயர் ஆகிய பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது.

நிலப்பரப்பில் ஏற்பட்ட இரண்டு மிகப்பெரிய நிலநடுக்கங்கள் அக்டோபர் 20 ஆம் திகதி பெர்த்ஷயரில் உள்ள லோச் லியோன் அருகே, சில மணி நேர இடைவெளியில் பதிவாகியுள்ளது. இதில், ரிக்டர் அளவில் 3.7 எனவும் 3.6 எனவும் பதிவாகியுள்ளது.
உள்ளூர் குடியிருப்பாளர் ஒருவர் தெரிவிக்கையில், தமது குடியிருப்புக்கு அடியில் சுரங்க ரயில் நிலையம் இருப்பதைப் போல் உணர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பதிவான 300-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்களில், 198 முறை மட்டுமே மக்கள் இது தொடர்பில் அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த நிலநடுக்கங்களில் 34 சம்பவங்கள் அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் லோச் லியோன் பகுதிக்கு அருகில் நிகழ்ந்தன.

ஒரு நாளைக்கு ஒரு முறை
டிசம்பர் 18 வரை பதிவாகியுள்ள தரவுகளின் அடிப்படையில் பிரித்தானியாவில் 309 நிலநடுக்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, பிரிட்டிஷ் புவியியல் ஆய்வு மையத்தின் நில அதிர்வு ஆய்வாளர் பிரையன் பாப்டி தெரிவிக்கையில்,

பேரழிவு ஏற்படுத்தக்கூடிய பெரும் நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்றபோதிலும், இந்த ஆண்டு, பிரித்தானியா சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு முறை என்ற அளவில் நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளது என்றார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |