சிறையில் வாடும் 300 பாலஸ்தீன சிறார்கள்... பணயக்கைதிகளுக்காக ஹமாஸிடம் பேரம் பேசும் இஸ்ரேல்

Israel Palestine Israel-Hamas War
By Arbin Nov 30, 2023 12:00 PM GMT
Report

ஹமாஸ் படைகளுடனான போர் நிறுத்தத்தின் ஒருபகுதியாக சிறையில் வாடும் 300 பாலஸ்தீன மக்களின் பட்டியலை வெளியிட்டு, பணயக்கைதிகளுக்கு ஈடாக அவர்களை விடுவித்து வருகிறது இஸ்ரேல்.

ஒருவர் 15 வயதான சிறுமி

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் மேலும் ஒருநாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை 180 பாலஸ்தீன மக்கள் இஸ்ரேல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன் ஹமாஸ் பிடியில் இருந்து 81 பணயக்கைதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சிறையில் வாடும் 300 பாலஸ்தீன சிறார்கள்... பணயக்கைதிகளுக்காக ஹமாஸிடம் பேரம் பேசும் இஸ்ரேல் | 300 Imprisoned Palestinians Exchange Hostages @reuters

இந்த நிலையில், இஸ்ரேல் விடுவிப்பதாக பட்டியலிட்டுள்ள 300 பேர்களில் 90 சதவீதம் 18 வயதும் அதற்கும் குறைவான சிறார்கள் என்றே தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஒருவர் 15 வயதான சிறுமி.

இஸ்ரேல் வெளியிட்டுள்ள குறித்த பட்டியலில் 5 பேர் 14 வயதுடையவர்கள், 6 பேர் 15 வயதுடையவர்கள், 37 பேர்கள் 16 வயதுடையவர்கள், 17 வயதுடைய 76 பேர்களும் 18 வயது நிரம்பிய 146 இளைஞர்களும் இஸ்ரேல் விடுவிக்க தயார் என கூறியுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

அத்துடன் இந்த 300 பேர்களில் 33 பேர்கள் பெண்கள். இஸ்ரேல் தரப்பில் இருந்து இதுவரை விடுவிக்கப்பட்ட இளைஞர்கள் அனைவரும் இஸ்ரேல் ராணுவத்தினர் மீது கல் வீசியதாக கைதானவர்களே என கூறப்படுகிறது.

பாலஸ்தீன மக்களில் ஐந்தில் ஒருவர்

அத்துடன், பயங்கரவாதத்தை ஆதரிப்பது, நெருப்பு வைத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவ நீதிமன்ற விசாரணை முறை தொடங்கிய பின்னர் பாலஸ்தீன மக்களில் ஐந்தில் ஒருவர் ஒரு கட்டத்தில் இஸ்ரேலிய சிறைவாசத்தை அனுபவிக்கும் நிலை ஏற்பட்டது.

சிறையில் வாடும் 300 பாலஸ்தீன சிறார்கள்... பணயக்கைதிகளுக்காக ஹமாஸிடம் பேரம் பேசும் இஸ்ரேல் | 300 Imprisoned Palestinians Exchange Hostages @reuters

தற்போது இஸ்ரேல் விடுவிப்பதாக கூறியுள்ள இந்த 300 பேர்களில் பலரும், எந்த குற்றச்சாட்டில் தாம் கைதாகியுள்ளோம் என்ற தகவலே தெரியாமல் சிறையில் உள்ளனர். சிறப்பு சட்டத்தால் விசாரணை ஏதுமின்றி 6 மாதங்கள் வரையில் ஒருவரை சிறை வைக்கலாம்.

ஆனால் அக்டோபர் 7ம் திகதிக்கு பின்னர், பாலஸ்தீன கைதிகள் மீது கொடூரமான தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர். இஸ்ரேல் சிறையில் இருந்து சமீபத்தில் விடுவிக்கப்பட்ட Omaima Bsharat என்ற பெண் தெரிவிக்கையில், மரணத்தின் பிடியில் இருந்து தப்பியது போன்று உணவர்தாக குறிப்பிட்டுள்ளார்.

8,300 பாலஸ்தீன மக்கள்

Mohammed Nazzal என்ற சிறுவனின் இரு கைகளையும் இஸ்ரேல் ராணுவத்தினர் உடைத்து அனுப்பியுள்ளனர். வெளியான தரவுகளின் அடிப்படையில், கடந்த 20 ஆண்டுகளில் 10,000 பாலஸ்தீனிய சிறார்கள் இஸ்ரேலிய இராணுவ தடுப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இஸ்ரேலிய இராணுவத்தால் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பெரும்பாலான பாலஸ்தீனிய சிறார்கள் உடல் மற்றும் உணர்வு ரீதியான துஷ்பிரயோகத்தை எதிர்கொண்டதாகவும் தரவுகளில் அம்பலமாகியுள்ளது.

சிறையில் வாடும் 300 பாலஸ்தீன சிறார்கள்... பணயக்கைதிகளுக்காக ஹமாஸிடம் பேரம் பேசும் இஸ்ரேல் | 300 Imprisoned Palestinians Exchange Hostages @afp

அக்டோபர் 7ம் திகதிக்கு பின்னர் 200க்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் இஸ்ரேல் ராணுவத்தால் அல்லது காஸாவில் குடியேறிய இஸ்ரேலியர்களால் கொல்லப்பட்டுள்ளனர்.

மட்டுமின்றி அக்டோபர் 7ம் திகதிக்கு பின்னர் 3,200 பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் கைது செய்துள்ளது. வெளியான தரவுகளின் அடிப்படையில், இஸ்ரேல் சிறையில் தற்போது 8,300 பாலஸ்தீன மக்கள் தண்டனை அனுபவித்து வருவதாக கூறப்படுகிறது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Guildford, United Kingdom

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம்

05 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US