உக்ரேனியர்கள் தஞ்சமடைந்திருந்த தியேட்டரை குண்டு போட்டு தகர்த்த ரஷ்யா.. 300 பேர் பலி!
உக்ரைனில் 1000 பேர் தஞ்சமடைந்திருந்த தியேட்டரை ரஷ்யா போர் விமானங்கள் குண்டு போட்டு தகர்த்ததில் 300 பேர் பலியானதாக மரியுபோல் நகர கவுன்சில் இன்று அறிவித்துள்ளது.
கடந்த வாரம் மரியுபோல் நகரில் நூற்றுக்கணக்கான மக்கள் தஞ்சமடைந்திருந்த தியேட்டர் குண்டு போட்டு தகர்க்கப்பட்டது.
குறிப்பாக, உள்ளே குழந்தைகள் இருப்பதை ரஷ்ய படைகைளுக்கு புரிய வைக்கும் படி, தியேட்டருக்கு வெளியே தரையில் ‘குழந்தைகள்’ என தெளிவாக எழுதப்பட்டிருந்ததைக் காட்டும் படங்கள் வெளியானதால், இச்சமப்வம் சர்வதேச அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
எனினும், இந்த தாக்குதலில் எத்தனை பேர் இறந்தார்கள் என்ற தகவல் வெளிவராமல் இருந்த நிலையில், தற்போது மரியுபோல் நகர கவுன்சில் அதிகாரப்பூர்வமாக பலி எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது.
தியேட்டர் தாக்குதலில் 300 பேர் கொல்லப்பட்டதாக நகர கவுன்சில் அறிவித்துள்ளது.
உக்ரைனின் முக்கிய எரிபொருள் கிடங்கை தாக்கி அழித்த ரஷ்யா! வெளியான வீடியோ ஆதாரம்
மரியுபோல் தியேட்டர் மீது ரஷ்ய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதில் 300 பேர் கொல்லப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளதாக நகர கவுன்சில் தெரிவித்துள்ளது.