கனடாவில் பற்றி எரியும் காட்டுத் தீ! 30,000 பேரை வெளியேற உத்தரவு..ட்ரூடோவின் பதிவு
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத் தீ பரவி வருவதால் 30,000 குடும்பங்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
வெளியேற உத்தரவு
பிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத் தீ வேகமாக பரவி வருவதால் வெள்ளிக்கிழமை அன்று 15,000 பேர் வெளியேறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
Reuters
இந்நிலையில் சமீபத்திய தகவல்களின்படி 30,000 பேரை வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த காட்டுத் தீயினால் உயிர் சேதம் எதுவும் பதிவு செய்யப்படாத நிலையில், 40 நோயாளிகள் மருத்துவமனைகளில் இருந்து மாற்று வசதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
பசிபிக் கடற்கரை மற்றும் கனடாவின் பிற பகுதிகளில் இருந்து முக்கிய நெடுஞ்சாலையின் பகுதிகளும் தீ காரணமாக ஓரளவு மூடப்பட்டன.
அனைத்து அத்தியாவசியமற்ற பயணங்களும் பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு தடை செய்யப்பட்டுள்ளன.
ட்ரூடோவின் பதிவு
இந்த நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள பதிவில், 'கூட்டாட்சி உதவிக்கான பிரிட்டிஷ் கொலம்பியாவின் கோரிக்கையைப் பெற்று, அதற்கு ஒப்புதல் அளித்துள்ளோம்.
நாங்கள் கனேடிய ஆயுதப்படைகளின் பிற தளவாடப் பணிகளுக்கு உதவ ஆதாரங்களை வழங்குதல், வெளியேற்றங்கள் ஆகியவற்றை வரிசைப்படுத்துகிறோம். தேவையான ஆதரவுடன் நாங்கள் தொடர்ந்து இங்கு இருப்போம்' என தெரிவித்துள்ளார்.
CFP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |