இந்திய மாநிலம் ஒன்றில் கோரதாண்டவமாடிய வெள்ளம்! 31 பேர் பலி
இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்திற்கு 31 பேர் பலியாகினர்.
கனமழை
வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் கடந்த 19ஆம் திகதி முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
24ஆம் திகதி முதல் மழை குறைந்த போதிலும், பெரும்பாலான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்த நிலையில், கனமழைக்கு 31 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகாம்கள்
மேலும் பாதிப்பிற்குள்ளான 72 ஆயிரம் பேர், குடியிருப்பு பகுதிகளைவிட்டு வெளியேறி வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்தனர்.
மாநிலத்தில் 492 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு புகலிடம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து சீராய்வு கூட்டம் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |