விவசாயி கொல்லப்பட்டதால் வெடித்த வன்முறை! பழங்குடியினர் மோதலில் 31 பேர் பலி
சூடானில் பழங்குடியினர் இடையேயான மோதலில் 31 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆப்பிரிக்க நாடான் சூடானின் ப்ளூ நைல் மாகாணத்தில் அரசு துருப்புகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கு இடையில் பல ஆண்டுகளாக சண்டை நடந்து வருகிறது.
கடந்த 2020ஆம் ஆண்டு கிளர்ச்சியாளர்களும், ராணுவமும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஆனாலும் அம்மாகாணத்தில் பாதுகாப்பு பலவீனமாக இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.
இந்த நிலையில் விவசாயி ஒருவர் கொல்லப்பட்டதால் பெர்டி மற்றும் ஹவுசா ஆகிய பழங்குடியினர் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் வன்முறையாக வெடித்ததில் 31 பேர் கொல்லப்பட்டனர்.
PC: Twitter
மேலும் 39 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவத் துருப்புகள், துணை ராணுவ விரைவு ஆதரவுப் படையினர் மற்றும் பொலிஸ் ஆகிய கூட்டுக்குழு படையினர் வன்முறையை கட்டுப்படுத்தி, சந்தேகத்திற்கிடமான நபர்களை கைது செய்தது.
PC: Twitter