தமிழகத்தில் ஒரே நாளில் 486 பேர் மரணம்.. 31,079 பேருக்கு கொரோனா உறுதி!
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றை விட(33,361) சற்று குறைந்து 31,079 ஆக பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 486 பேர் பலியாகியுள்ளனர், இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 22,775 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி(மே 28) ஒட்டுமொத்தமாக 20,09,700 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டள்ளனர், அதில் 16,74,539 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்னர்.
வீட்டில் உட்பட மொத்தம் 3,12,386 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், கடந்த 24 மணிநேரத்தில் 31,255 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 3937 பேருக்கு புதிதாக தொற்று உறுதியானது.
இன்று சென்னையில் 2762 பேருக்கு தொற்று உறுதியானது மற்றும் 107 பேர் பலியாகியுள்ளனர்.
31,079 patients test positive for #COVID19 in Tamil Nadu today (May 28). Here is the update. #Corona pic.twitter.com/3JGOTQnvhM
— D Suresh Kumar (@dsureshkumar) May 28, 2021
இதனிடையே, தமிழ்நாட்டில் தற்போது அமுலில் உள்ள முழு தீவிர ஊரடங்கு மேலும் ஒரு வாரம், அதாவது 7-6-2021 காலை 6 மணி வரை நீட்டிக்கப்படும் என மாநில முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.